Site icon Tamil News

அமெரிக்காவுக்கு செல்ல விரும்புவோருக்கு விசா நடைமுறைகளில் மாற்றம்!

அமெரிக்காவுக்கு செல்ல விரும்புவோருக்கான விசா நடைமுறைகளில் அமெரிக்க வெளியுறவுத்துறை சில விலக்குகளை அறிவித்துள்ளது.

பணி மற்றும் கல்வி நிமித்தமாக செல்ல விரும்புவோருக்கே இந்த நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைப்படி, Non Immigrant விசா பெற்றிருப்பவர்கள் 48 மாதங்களுக்குப் பின் விசாவை புதுப்பிக்கும் போது நேர்காணலில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விசா – விலக்கு பெற்ற நாடுகளிலிருந்து முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

தூதரக அதிகாரிகள், உள்ளூர் நிலைமையை ஆராய்ந்து அதன்படி முடிவு எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version