Tamil News

‘சந்திராயன் 3’ வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கமல்- ரஜினி வாழ்த்து.!

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 என்ற விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது.

இந்த வெற்றியை இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி உட்பட பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசன்: செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது முதல், நிலவில் தரை இறங்குவது வரை என்ன ஒரு பயணம். தேசத்தின் பெருமை இஸ்ரோ. நமது விண்வெளி பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

ரஜினிகாந்த்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா இந்த மாபெரும் சாதனையை செய்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல்முறையாக நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்தி உள்ளது. நீங்கள் எங்களை பெருமைப்படுத்த உள்ளீர்கள். இஸ்ரோவிற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version