Tamil News

சந்திரயான் 3 தொடர்பில் இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!

நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை: 2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றது.

சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மீண்டும் நாளை(ஜூலை 18) மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

சந்திரயான் – 3 விண்கலம் தற்போது 41 ஆயிரத்து 603 கிலோ மீட்டருக்கு 226 கிலோ மீட்டர் தூரமுள்ள சுற்றுவட்டப் பாதையில் உள்ளது. தற்போது சந்திரயான் – 3 விண்கலம் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் – 3 விண்கலத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Exit mobile version