Tamil News

லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றச்சாட்டு… மூன்று பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு, சென்சார் சான்றிதழ் வாங்க 7 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக விஷால் சமூக வலைத்தளத்தில் குற்றச்சாட்டுவைத்தார்.

இது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், CBI மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நடிகர் விஷால், பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில், பான் இந்தியா படமாக செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. வித்தியாசமான கதைக்களத்தில், டெலிபோன் மூலம் டைம் டிராவல் செய்வது போல், எடுக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு, தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

ஹீரோ விஷாலாக இருந்தாலும், அவரின் நண்பனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யா நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து, விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்த படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஷால், கடந்த வாரம்… தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மும்பை சென்சார் போர்ட் குறித்து, லஞ்ச குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தன்னுடைய மார்க் ஆண்டனி படத்தின் இந்தி சென்சார் சான்று பெற, மேனகா என்கிற இடை தரகர் மூலம் இரண்டு பேருக்கு சுமார் 6.5 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாகவும். திரைப்படங்களில் முறைகேடுகள் நடப்பதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் நிஜத்தில் இது போன்ற மோசமான ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியாது, என்னை போல் மற்ற தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் இந்த தகவலை கூறுவதாக விஷால் தெரிவித்திருந்தார்.

மேலும் இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை ஒன்றையும் வைத்தார். விஷால் இந்த குற்றச்சாட்டை முன் வைத்த 24 மணிநேரத்தில், மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் ஒளிபரப்புத்துறை தன்னுடைய X பக்கத்தில், இந்த குற்றச்சாட்டு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் யாரும், சீனியர் அதிகாரி ஒருவர் இதுபற்றி விசாரிக்கு மும்பை சென்றதாக தெரிவித்தது. இதற்க்கு விஷாலும் தன்னுடைய நன்றியை தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, இந்த லஞ்ச குற்றச்சாட்டு குறித்து வெளியாகியுள்ள தகவலில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மெல்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன், ஆகியோர் மீதும், சில தணிக்கை சான்று அமைப்பு ஊழியர்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதே போல் குற்றம் சாட்டப்பட்ட தனி நபர்களின் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version