Site icon Tamil News

மூன்று பணிப்பெண்களை பணிநீக்கம் செய்த Cathay Pacific Airways நிறுவனம்!

Cathay Pacific Airways விமான சேவை நிறுவனம் மூன்று பணிப்பெண்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தலைமை நிர்வாகி ரொனால்ட் லாம் அறிவித்துள்ளார்.

ஆங்கிலாம் பேசாதவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்மேற்மகு சீன நகரமான செங்டுவில் இருந்து ஹாங்காங்கிற்கு CX987 என்ற விமானம் பயணித்தது.

குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், ஆங்கிலத்தில் போர்வைக்கு பதிலாக கார்பெட் கேட்டதற்காக விமான பணிப்பெண்கள் மற்றவர்களை கேலி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே மே்ற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் அனுபவம் பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது என ஏர்லைன்ஸ் கூறியுள்ளதுடன், இதற்காக மன்னிப்பும் கோரியுள்ளது.

தனிப்பட்ட ஊழியர்களால் நிறுவன விதிகள், மற்றும் நெறிமுறைகள் மீறப்பட்டமைக்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகள் மீளவும் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version