Site icon Tamil News

சீனாவில் உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த பூனை – 100,000 யுவான் செலவு

சீனாவில் வளர்ப்பு பூனையொன்று அதன் உரிமையாளரின் வீட்டைத் தீப்பற்றச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிங்கோதியாவ் (Jingoudiao) எனும் அந்தப் பூனை சமையலறையில் விளையாடிக்கொண்டிருந்த போது மின் சமையல் கலனைத் தவறுதலாக இயக்கியது.

அதன் காரணமாக வீடு தீப்பற்றியுள்ளது. இதன் போது வீட்டின் முதல் மாடி தீக்கிரையானது.

அதைச் சரிசெய்ய 100,000 யுவான் செலவு செய்யவேண்டும். தீயில் வீட்டு உரிமையாளருக்கும் பூனைக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

ஆயினும் ஜிங்கோதியாவின் உரிமையாளர் டான்டான் (Dandan), அதன் மேல் கோபப்படாமல் அந்தச் சம்பவத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டார்.

ஜிங்கோதியாவ் Douyin தளத்தில் நேரடிக் காணொளிகளில் தோன்றி செய்த தவற்றைச் சரிசெய்யப் பாடுபடுவதாக அதன் உரிமையாளர் நகைச்சுவையாகக் கூறுவார்.

தீயணைப்பாளரைத் தொடர்புகொண்டு அவரிடம் ஜிங்கோதியாவுக்குத் தீத்தடுப்பு, பாதுகாப்பு வழிகளைக் கற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டார்.

Exit mobile version