Site icon Tamil News

இத்தாலியில் திடீரென பச்சை நிறமாக மாறிய கால்வாய் – குழப்பத்தில் பொலிஸார்

இத்தாலியில் புகழ்பெற்ற கிராண்ட் கால்வாயின் ஒரு பகுதி பச்சை நிறமாக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெனிஸ் நகரில் உள்ள கால்வாயிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களே அதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நீரின் நிறம் மாறியிருப்பதை முதலில் நகரவாசிகள் உணர்ந்ததாக அப்பகுதியின் தலைவர் லூகா சையா (Luca Zaia) தமது Twitter பக்கத்தில் தெரிவித்தார்.

சுற்றுப்பயணிகள் பச்சை நிற நீரைப் படம் எடுத்தனர். அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சோதனை செய்வதற்காக அந்த நீரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

கிராண்ட் கால்வாய் பச்சை நிறத்திற்கு மாறியிருப்பது இது முதல்முறை அல்ல என கூறப்படுகின்றது.

1968இல் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பெருக்க அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஓவியர் நிக்கலஸ் கார்சியா உரிபுரு (Nicolas Garcia Uriburu) காய்வாயில் பச்சை சாயத்தைக் கலந்துவிட்டார்.

Exit mobile version