Site icon Tamil News

கனடாவின் ஆதரவு எப்போதும் உக்ரைனுக்கு உண்டு – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கடுமையான எதிர் தாக்குதலை முன்னெடுக்கவிருக்கும் நிலையில், அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கு சென்றுள்ளார்.

ரஷ்யப் படைகளுக்கு எதிரான ஒரு பெரிய எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகிறது உக்ரைன். மட்டுமின்றி வழக்கமான வான்வழித் தாக்குதல்களையும் எதிர்கொண்டு போராடுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2014 முதல் ரஷ்ய சார்புப் படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களுக்கு மத்திய கியேவில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

நேட்டோ உறுப்பு நாடான கனடா, உலகில் மிக அதிக எண்ணிக்கையில் உக்ரேனிய புலம்பெயர் மக்களை ஏற்றுக்கொண்ட நாடாகும். பிப்ரவரி 2022ல் ரஷ்யாவால் தொடங்கப்பட்ட முழு அளவிலான படையெடுப்பின் போது உக்ரைனுக்கு இராணுவ மற்றும் நிதி உதவியையும் கனடா வழங்கி வருகிறது.

உக்ரைன் தலைநகருக்கு வெளியே கடுமையான ஏவுகணை தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துவரும் நிலையிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version