Site icon Tamil News

கனடாவில் 5 மில்லியன் தேனீக்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி… மீட்கும் பணி தீவிரம்

கனடாவின் ஒன்ட்டாரியோ மாநிலத்தில் டிரக்கிலிருந்த சுமார் 5 மில்லியன் தேனீக்களைக் கொண்ட தேன் கூடுகள் விழுந்ததால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த தேனீக்களை கட்டிவைத்திருந்த பட்டைகள் தளர்ந்ததால் அவை விழுந்தன. வீதி முழுவதும் எங்கிருக்கிறோம் என்பது புரியாத நிலையில் கோபத்துடன் தேனீக்கள் பறந்தன.

ஓட்டுநர்களுக்கு வாகனச் சன்னல்களை மூடி வைக்குமாறும் பாதசாரிகளுக்கு அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.

தேனீக்களைக் கையாளக் காவல்துறை அதிகாரிகள் தேனீக்கள் வளர்ப்பவர்களைத் தொடர்புகொண்டதாக நிலையில் அவ்விடத்தில் 12 பேர் திரண்டனர்.

தேனீக்களும் தேன்கூடுகளும் 400 மீட்டர் ஆரத்தில் பரந்திருந்தன. சில மணி நேரம் கழித்து, பெரும்பாலான தேனீக்கள் தங்களின் தேன்கூட்டைக் கண்டுபிடித்துவிட்டன. நூற்றுக்கணக்கான தேனீக்கள் உயிரிழந்துள்ளன.

உதவ வந்தவர்களில் சிலரையும் டிரக் ஓட்டுநரையும் தேனீக்கள் கடித்தன. யாருக்கும் கடுமையான காயங்கள் இல்லை. குளிர்காலத்திற்காகத் தேனீக்கள் வேறோர் இடத்திற்கு மாற்றப்படும்போது அந்தச் சம்பவம் நடந்தது.

Exit mobile version