Tamil News

கம்போடியா பிரதமர் பதவியில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்?

தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.

ஆளும் கட்சியான கம்போடிய மக்கள் கட்சியும் தேர்தலில் பங்கேற்றது.அதற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைந்தன.

125 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கம்போடிய மக்கள் கட்சி 120 இடங்களைக் கைப்பற்றியது.

இதன்படி மொத்த வாக்குகளில் 96 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

இதன் பின்னர், ஆசிய நாடுகளில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த ஹுன் சென் (வயது 70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக சென் தெரிவித்துள்ளார்.

தனது மூத்த மகன் ஹன் மானெட்டிடம் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு 3 வாரங்களுக்குள் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக ஹன் சென் அறிவித்துள்ளார்.

தற்போது அந்நாட்டின் பாதுகாப்பு துறையை ஹன் மானெட் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version