Site icon Tamil News

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடி : அடுத்த மாதம் முதல் மின்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

வறண்ட காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவினங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க  இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வரும் ஜனவரி மாதம் முதல்  மின் கட்டண உயர்வை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஒக்டோபர் மாதமே மின்கட்டண உயர்வை கோரியிருந்ததாக   கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்தார்.

இவ்வருடம் போதிய அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால், மின் உற்பத்திக்கான கூடுதல் செலவை இலங்கை மின்சார சபை ஏற்க நேரிட்டதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று லங்கா மின்சார (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் (லெகோ) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்தமாதம் வழங்கப்படவுள்ள மின்கட்டணத்தில் இந்த வரி சேர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகவே அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version