Site icon Tamil News

திருகோணமலையில் பதற்ற நிலை : வலுக்கும் கண்டனங்கள்!

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை தாங்கி வந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 06 சந்தேக  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 06 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும்,  அவர்கள் 35ற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை  கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களுக்கு ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை இந்த விடயத்திற்கு புலம் பெயர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும்,  பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும் ஒரே மாதிரியான சட்டம்இஒழுங்கு பிரச்சினையாக கருதி விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் வலியுறுத்தியுள்ளார்.

 

Exit mobile version