Tamil News

“தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்” முதல் முறையாக நடந்த கூட்டத்தில் அறிவிப்பு

அரசியலில் கால் பதித்துள்ள தளபதி விஜயை, 2026-ல் தமிழகத்தின் முதல்வராகியே தீர வேண்டும் என புஸ்ஸி ஆனந்து கட்சி தொண்டர்கள் முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கோலிவுட் திரையுலகில் வசூல் மன்னனாகவும், 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோவாகவும் இருக்கும் விஜய், கடந்த சில வருடங்களாக அரசியல் பற்றி பேசி வந்தாலும், திடீர் என தன்னுடைய கேரியரை விட்டு வெளியேறி, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியது யாரும் எதிர்பாராத ஒன்றாகவே உள்ளது.

விஜய் அரசியல் கட்சி குறித்து அறிவித்த பின்னர்… முதல் முறையாக பனையூரில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, விஜய் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ரசிகர்களை சந்தித்ததாக தெரிகிறது.

புஸ்ஸி ஆனது, ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில்… அவர் பேசியபோது, 2026-ல் தளபதியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என பேசியுள்ளார்.

இந்த வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ள புஸ்ஸி ஆனந்த், “உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பில் தான் எல்லாமோ இருக்கிறது. இதற்கு முன்பு நாம் எந்த மாதிரி இருந்தோம், என்பது வேறு இதற்கு மேற்பட்டு தலைவர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்ய போகிறோம். தலைவர் என்கிற பதவி இனி யாருக்கும் இல்லை. 2026-ல் முதலமைச்சராக தலைவரை நாம் அமர வைக்கவேண்டும் என பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Exit mobile version