Site icon Tamil News

மெக்சிகோவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்-லொரி ; பரிதாபகரமாக 19 பேர் பலி!

மெக்சிகோவில், சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. அதிவிரைவாக செல்லுதல், வாகனங்களின் தரமற்ற நிலை அல்லது களைப்படைந்த ஓட்டுநர் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன. சரக்கு லாரிகள் விபத்தில் சிக்குவதும் அந்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், மெக்சிகோவின் வடமேற்கே கடந்த செவ்வாய் கிழமை சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பஸ் மற்றும் லொரி மோதி கொண்டதில், 19 பேர் பலியாகி உள்ளனர். 22 பேர் காயமடைந்தனர்.

அந்த பஸ் ஜலிஸ்கோ மாகாணத்தின் குவாதலஜரா நகரில் இருந்து சினலோவா மாகாணத்தின் லாஸ் மொகிஸ் நகரை நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ் மற்றும் லாரி மோதி கொண்டதில், பஸ் தீப்பிடித்து கொண்டது. இதில், உயிரிழந்த 19 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

சமீபத்தில், 2023ம் ஆண்டு ஜூலையில், மலை சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்சில் இருந்த பயணிகளில் 29 பேர் உயிரிழந்தனர்.

Exit mobile version