Tamil News

புனித குர்ஆன் எரிப்பு: ஐநா மனித உரிமைகள் பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

புனித குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது.

பாகிஸ்தானும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிற நாடுகளும் கூட்டாக இந்தக் கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தன

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 28 நாடுகளும், எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. 7 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சீனா, இந்தியா, கியூபா, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், வியட்நாம் ஆகிய நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கோஸ்டாரிகா, மாண்டினீக்ரோ போன்ற நாடுகள் எதிராக வாக்களித்தன. அவை பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டங்களுடன் முரண்படுவதாக வாதிட்டன

பெனின், சிலி, மெக்சிகோ, நேபாளம் போன்ற நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

கடந்த மாதம், ஈத் அல்-அதா விடுமுறையின் போது ஸ்டாக்ஹோமில் உள்ள மசூதிக்கு வெளியே ஒருவர் குர்ஆனின் பக்கங்களைக் கிழித்தும், சிலவற்றைக் கொண்டு தனது காலணிகளைத் துடைத்தும், மற்றவற்றை எரித்ததற்கும் ஈராக் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

 

Exit mobile version