Site icon Tamil News

உலகின் உயரமான கட்டிடத்தில் ஏறிய போது பொலிஸ் பிடியில் சிக்கிய பிரித்தானியர்

உலகின் 5வது உயரமான கட்டிடமாக கருதப்படும் தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள லோட்டே வேர்ல்ட் கட்டிடத்தில் ஏற முயன்ற பிரித்தானியரை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

123 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 72 தளங்களில் எந்தவித பாதுகாப்புக் கயிறும் ஆதரவும் இல்லாமல் ஏறிச் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் பெயர் ஜார்ஜ் கிங்-தாம்சன் (George King-Thompson) ஒரு பிரபல மலை ஏறுபவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

சமூக வலைதளங்களில் தனது துணிச்சலைப் பகிர்வதில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது.

அனுமதியின்றி உயரமான கட்டிடங்களில் ஏறிய குற்றச்சாட்டில் இவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, 2019 ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள மிக உயரமான கட்டிடமான தி ஷார்ட் மீது ஏறியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

555 மீட்டர் (1,820 அடி), லோட்டே வேர்ல்ட் கட்டிடம் தென் கொரியாவின் மிக உயரமான கோபுரமாகக் கருதப்படுகிறது.

Exit mobile version