Tamil News

பிரிட்டன் பொது தேர்தல் ;விறுவிறுப்பான வாக்குப்பதிவு… மனைவியுடன் வாக்களித்தார் ரிஷி சுனக்

பிரிட்டன் அடுத்த நாடாளுமன்றத்தை தேர்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றி தொடங்கி தடைபெற்று வருகிறது. பிரதமர் ரீஷி சுனக் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.

பிரிட்டனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றன.ஆனால் இந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கே வெற்றி வாயப்பு அதிகம் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இந்த தேர்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

நாட்டின் புதிய அரசை தீர்மானிக்க கூடிய இந்த தேர்தலில் நாடாளுமன்ற கீழவையான மக்களவையின்(ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவை 326 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றால்தான் பிரிட்டனில் ஆட்சி அமைக்க முடியும் .

UK general elections: Poll process, voter eligibility & key issues; 10  things you need to know - Times of India

நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடல்கும். இந்த ஆண்டு முதல் வாக்களிக்க அடையாள அட்டை கொண்டு வருவது கட்டாயமாக்கப்படுடள்ளது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நைடபெறும். உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023ம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்த தேர்தலில் தான் முதல் துறையாக அமுலுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியதற்கு (பிரெக்ஸி) பிறகு நடைபெறும் முதல் பொது தேர்தல் இது.

கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதமர் விரும்பினால் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னரே தேர்தலை நடத்த மன்னரை கேட்டு கொள்ள முடியும் ஆனால் அந்த ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற நிலைப்ப பருவ கால சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நாடாளுமன்ற கலைப்புரிமை சட்டம் 2022ம் ஆண்டு இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாக்உம் .

Exit mobile version