Site icon Tamil News

படுகாலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு நாளை ஒரு நிமிட மௌன அஞ்சலி : நகரபிதாக்கள் கூட்டமைப்பு

இஸ்லாமியப் பயங்கரவாதியால் படுகாலை செய்யப்பட்ட ஆசிரியர் தொமினிக் பேர்னார் (Dominique Bernard) இற்கு அஞ்சலி செயயும் முகமாக, நாளை ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என, நகரபிதாக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் முழுவதும், கொலேஜ்கள், லிசேக்கள், மற்றும் நகரசபைகள் ஆகியவற்றில் நாளை 16ம் திகதி 14:00 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும் என நகரபிதாக்களின் கூட்மைப்பு அனைத்து நகரசபைகளிற்கும் அறிவித்துள்ளது.

பேராசிரியர் சமுயல் பற்றி இஸ்லாமியப் பயங்கரவாதியால் கொல்லப்ப்பட்ட அதிர்ச்சி நீங்கு முன், இன்னுமொரு இஸ்லாமியப் பயங்கரவாதியான் தொமினிக் பேர்னாரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் நிலப்பரப்பில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களிடம் ஒருவித கிளர்ச்சியை தூண்டியுள்ளது. அதன் காரணமாகவே Arras நகரில் உள்ள குறித்த உயர்கல்வி பாடசாலையில் தாக்குதல் இடம்பெற்றதாக பிரதமர் நேற்று தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பும் பிரான்சில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கும் தொடர்பு இல்லை என்றபோதும், அந்த தாக்குதல் ஒரு தூண்டுகோலாக இருந்ததாக பிரதமர் குற்றம் சாட்டினார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version