Site icon Tamil News

ஏரிகளுக்கடியில் குண்டுகள்: சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

லூசெர்ன், துன் அல்லது நியூசாடெல் ஏரிகளின் அஞ்சலட்டை காட்சிகளை அனுபவிக்கும் சுற்றுலாப் பயணிகள், அந்த அழகிய ஆல்பைன் நீரின் அடியில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து ஆச்சரியப்படலாம்.

பல ஆண்டுகளாக சுவிஸ் இராணுவம் ஏரிகளை பழைய வெடிமருந்துகளை கொட்டும் இடமாக பயன்படுத்தியது, அவை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படலாம் என்று நம்பினர்.

Lucerne ஏரியில் மட்டுமே சுமார் 3,300 டன் குண்டுகள் கிடக்கின்றன. Neuchatel ஏரியில் சுமார் 4,500 டன் குண்டுகள் கிடக்கின்றன. இந்த குண்டுகள் 2021ஆம் ஆண்டு முதல் சுவிஸ் விமானப்படை, பயிற்சிக்காக பயன்படுத்திய குண்டுகள் ஆகும்.

சில வெடிமருந்துகள் 150 முதல் 220 மீட்டர் ஆழத்தில் உள்ளன, ஆனால் மற்றவை நியூசாடெல் ஏரியின் மேற்பரப்பில் இருந்து ஆறு அல்லது ஏழு மீட்டர் கீழே உள்ளன.

இப்போது, ​​சுவிஸ் பாதுகாப்புத் துறையானது, அதை வெளியேற்றுவதற்கான சிறந்த யோசனைக்காக 50,000 பிராங்குகளை (£45,000) பரிசுத் தொகையாக வழங்க இருப்பதாக சுவிஸ் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

Exit mobile version