Site icon Tamil News

இந்தோனேசியா அருகே விபத்துக்குள்ளான ரோகிங்கியா முஸ்லிம் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு

வங்க தேசத்தில் உள்ள முகாம்களில் இருந்து ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள் கடல் வழியாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகுகள் மூலம் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அவ்வாறு செல்பவர்கள் உரிய பாதுகாப்பின்றி பயணம் செய்வதால், சில சமயங்களில் விபத்துகள் அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் வடக்கில் உள்ள ஆச்சே மாகாணத்தின் கோலா பூபான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த படகில் ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள் பயணம் செய்துள்ளனர்.

இந்த விபத்து நடந்தபோது அந்த பகுதி அருகே சென்ற உள்ளூர் மீனவர்கள் சிலர், 6 அகதிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இருப்பினும் படகில் இன்னும் அதிகம் பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கரைக்கு கொண்டு வரப்பட்ட அகதிகள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version