Site icon Tamil News

90 வயதில் தன் கனவை நிறைவேற்றிய அமெரிக்க கறுப்பின விண்வெளி வீரர்

அமெரிக்காவின் முதல் கறுப்பின விண்வெளி வீரரான எட் டுவைட், தனது 90வது வயதில் விண்வெளிக்குச் செல்லும் தனது கனவை நிறைவேற்றியுள்ளார்.

சமீபத்தில் ஜெப் பெசோஸின் ராக்கெட் நிறுவனத்தில் எட் டுவைட் விண்வெளிப் பயணத்தில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி ஜான் எப் கென்னடி அவரை நாசா விண்வெளி வீரர்களின் வேட்பாளராக நியமித்தபோது எட் டுவைட் விமானப்படை விமானியாக பணியாற்றினார்.

இருப்பினும், 1963 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த ஆசையை நிறைவேற்றும் நம்பிக்கையில், ப்ளூ ஆரிஜின் கேப்ஸ்யூலில் ஐந்து பயணிகளுடன் சுமார் 10 நிமிடங்கள் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு டுவைட்டிற்கு கிடைத்தது.

அவர் அதை வாழ்க்கையை மாற்றும் அனுபவம் என்று அழைத்தார். இளமையில் இருந்தே ஒரு நம்பிக்கையை முதுமையிலும் நிறைவேற்றுவது பெரும் பாக்கியம் என்றார்.

அதன்படி, மேற்கு டெக்சாஸில் இருந்து குறுகிய விமானத்தில் விண்வெளிக்குச் சென்ற அதிக வயதான நபர் என்ற சாதனையை டுவைட் பெறுவார்.

இதற்கு முன்பு இந்த சாதனையை வைத்திருந்த வில்லியம் ஷாட்னரை விட டுவைட் இரண்டு மாதங்கள் மூத்தவராகும்.

Exit mobile version