Tamil News

‘லியோ’ படத்தில் பிக்பாஸ் வனிதாவின் மகன்… படம் பார்த்தவர்களுக்கு மட்டும்….

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது ‘லியோ’.

ஃபர்ஸ்ட் ஆப் படு ஃபயராக உள்ள நிலையில், இரண்டாம் பாதியில் பல ட்விஸ்ட் இருந்தாலும், தேவையில்லாத சண்டை காட்சிகள் படத்தின் வேகத்தை பதம் பார்த்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதே நேரம் இப்படம் LCU லிஸ்டில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

முதல்நாளில் சுமார் 148 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வருடத்தில் முதல் நாளிலேயே அதிகம் வசூல் செய்த முதல் இந்தியப்படம் என்கிற சாதனையையும் தனதாக்கியது லியோ.

இதில், பிக்பாஸ் போட்டியாளராக நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீ ஹரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள காட்சியின் போட்டோ வைரலாகி வருகிறது.

விஜய் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், சித்தப்பா அர்ஜுனிடம் தான் ‘லியோ’ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில குடும்ப புகைப்படங்களை காண்பிப்பார், அதில் தனது மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் என்று காண்பிப்பார். அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான ஸ்ரீ ஹரிதான்.

Exit mobile version