Site icon Tamil News

WhatsAppஇல் உள்ள சிறப்பான அம்சங்கள்

செயலி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, உரையாடலின் தனியுரிமையைப் பாதுகாப்பது உட்பட வாட்ஸ்-அப், மொபைல் ஃபோனில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைவதற்கான கட்டணமில்லாத சேவைகளை வழங்குகிறது

வாட்ஸ்அப்பில் உங்களுக்கு செலவு என்பது செல்லுலார் தரவு இணைப்பு அல்லது வைஃபை மட்டுமே. ஆனால், உங்களுக்கு இந்த செயலியால் என்ன பயன்கள், அதன் சிறப்பான அம்சங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்…

ஒருவருக்கு தவறான செய்தியை அனுப்பினால், கவலைப்படத் தேவையில்லை. வாட்ஸ்அப்பில், அனுப்பிய செய்தியை சிறிது நேரத்திற்குள் நீக்கலாம். இதன் மூலம், உங்கள் மெசேஜ்கள் உங்கள் போனில் இருந்து மட்டுமின்றி, நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ, அவர்களின் வாட்ஸ்அப் செயலியில் இருந்தும் பெறுநரின் போனிலிருந்தும் நீக்கப்படும்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வெறும் உரையாக மட்டும் இல்லாமல், சொந்த சிறு கிளிப்புகள், புகைப்படங்கள் மற்றும் GIF களையும் பதிவேற்றலாம். இந்த அம்சம் உங்கள் செயல்பாடுகளைப் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வேடிக்கையாக சொல்லலாம்

உங்களது பல குழுக்களில் ஏதேனும் சில குழுக்களில் அதிக அளவு செய்திகள் வருவதை தவிர்க்க நினைத்தால், குழுவை முடக்கும் வசதியை WhatsApp வழங்குகிறது. நீங்கள் விரும்பினால், குழுவை நிரந்தரமாக அல்லது குறிப்பிட்ட சமயத்திற்கு முடக்கலாம்.

அரட்டைகளை லாக் செய்யும் வசதியையும் வாட்ஸ்அப் வழங்குகிறது. தனிப்பட்ட அரட்டையை யாரும் படிக்க வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால், இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். இதைச் செய்ய, நீங்கள் அமைப்புகளுக்குச் சென்று அரட்டை பூட்டு (chat lock) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

செய்திகளை ஆடியோவாகவும் அனுப்பலாம், வீடியோ செய்திகளையும் பகிரலாம் என்பது இதன் முக்கியமான அம்சம் ஆகும்

Exit mobile version