Site icon Tamil News

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

வெங்காயத்தில் பொதுவாகவே நார்ச்சத்துக்களும், விட்டமின்களும், உடலுக்கு நன்மை பயக்கும் தாதுக்களும் நிறைந்துள்ளன.

இதில் ‘க்வெர்சட்டின்’ என்ற சல்பர் மூலமும் உள்ளது. இதனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.

நம் நாட்டில் பலரும் வெங்காயத்தை பச்சையாகவும் அல்லது உணவில் சேர்த்தும் சாப்பிடுகிறார்கள். ஆனால், வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும்போது அதில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும்போது அதிலுள்ள எல்லா ஊட்டச்சத்துக்களும் நமக்கு நேரடியாகக் கிடைக்கிறது.

இதனால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக இது பார்க்கப்படுகிறது.

இயற்கையாகவே வெங்காயத்தில் கந்தகம் இருக்கிறது. இதனாலேயே அதன் வாசனை சற்று கடுமையாக இருக்கும். ஆனால், வெங்காயம் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இது இதய நோய் அபாயங்களைக் குறைப்பதாகச் சொல்லப்படுகிறது.

வெங்காயத்தில் மாங்கனீஸ், தாமிரம், பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன.

இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கிறது. தினசரி வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் பல நரம்பியல் நோய்களின் அபாயம் குறைவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, வெங்காயம் நமது உடலை வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கிறது. இதிலுள்ள அபரிமிதமான மருத்துவ குணங்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

வெங்காயத்தை பச்சையாக உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இதனால் சில மோசமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான தாதுக்களால் அதை பச்சையாக உண்ணும்போது சிலருக்கு ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். அத்துடன் சிலருக்கு சளி பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, நீங்கள் ஆரோக்கியமான நபராக இருந்தால் தினசரி சிறிதளவு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். ஆனால், வெங்காயத்தை பச்சையாக சாப்பிட முடிவெடுப்பதற்கு முன்பு, ஒரு நல்ல மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு அதைத் தொடங்குவது நல்லதாகும்.

 

Exit mobile version