Site icon Tamil News

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுவாயுதங்களை விட சக்தி வாய்ந்த அணுவாயுதங்களை பெற்றுள்ளதாக பெலாரஸ் அறிவிப்பு!

பெலாரஸ் ரஷ்யாவிடம் இருந்து தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பெறத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ  தெரிவித்துள்ளார்.

குறித்த அணுவாயுதங்கள் 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட மூன்று மடங்கு சக்திவாய்ந்தவை என்றும்  அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,   ரஷ்ய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு “எல்லாம் தயாராக உள்ளது” என்றும் கேட்டதை விட அதிகமாக பெறுவதற்கு சில காலங்கள் எடுக்கும் என்றும் கூறினார்.

பெலாரஸ் ஏற்கனவே சில ஆயுதங்களைப் பெற்றுள்ளதா என ரஷ்ய செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்தும் இல்லை, சிறிது சிறிதாக” பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version