Site icon Tamil News

மொட்டுவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திடீர் அழைப்பு விடுத்துள்ள பசில் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் முற்பகல் 10.45 மணியளவில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, 05 வருடங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துரையாடலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு வந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (06) பிற்பகல் நடைபெற்ற இது தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சுரேஷ் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version