Site icon Tamil News

ஹரீன் மற்றும் மனுஷாவை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது சட்டப்பூர்வமானது – சுமந்திரன் உச்ச நீதிமன்றில் வாதம்

 

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கட்சி மாறுவதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகளை ஆதரிப்பதன் மூலம் பாராளுமன்ற முறைமையை பேணுவது சவாலுக்கு உள்ளாகும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை இரத்து செய்யும் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சமகி ஜன பலவேக சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணை நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று கட்சி உறுப்புரிமையை இழந்துள்ளதாக சமகி ஜன பலவேகய சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மனுதாரர்கள் ஆளும் கட்சியில் இணைந்துள்ளதன் மூலம் கட்சி உறுப்புரிமையை இழந்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டப்பூர்வமானது எனவும், அவர்களின் மனுக்களை நிராகரிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் மேலும் கோரினார்.

இந்த மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version