Site icon Tamil News

கனடாவில் மாதாந்த வீட்டுக்கடன் செலுத்தும் தொகை 40 விகிதம் அதிகரிக்கும்-கனடிய மத்திய வங்கி

Photo Credit: Bank of Canada மாறக்கூடிய வட்டி விகிதத்தை தற்பொழுது செலுத்திக்கொண்டு இருக்கும் வீட்டுக்கு கடன் பெற்றவர்கள் வரும் மூன்று வருடங்களில் 40 விகிதம் அதிகரிக்கும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை செலுத்துவபர்கள் 20 இல் இருந்து 25 விகிதம் வரை செலுத்துவார்கள் எனவும் கனடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஒப்பீடு ஆனது 2022ஆம் ஆண்டு மாதாந்தம் கட்டும் தொகையை ஒப்பிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் பல வங்கிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதை எடுத்துக் காட்டி இவ்வாறான நிகழ்வால் வட்டி விகிதம் இவ்வாறு அதிகரிக்கும் என்று வங்கி கருத்து தெரிவிக்கின்றது. இப்பொழுது சிலிக்கான் வாலி வங்கி மற்றும் சிக்னேச்ச வங்கிகளில் ஏற்பட்ட பாதிப்பு கனடாவுக்கு குறிப்பிட்ட பாதிப்பையே கொடுக்கும் என்றும் வங்கி கருத்து தெரிவித்துள்ளது.

Exit mobile version