Site icon Tamil News

அமைதி நிலைக்கு திரும்பிய பங்களாதேஷ் – தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகள் மீண்டும் திறப்பு

வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் கடந்த 16ந்தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை நாடு முழுவதும் பரவியது.

இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. வன்முறை கட்டுக்குள் வராததால் வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே உச்சநீதிமன்றம் வன்முறைக்கு காரணமாக வேலைவாய்ப்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவித்தது.

அதனைத் தொடர்ந்தது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதிகாரிகள் டாக்கா மற்றும் வங்காளதேசத்தின் 2வது மிகப்பெரிய நகரமான சட்டோகிராமில் சில பகுதிகளில் பிராட்பேண்ட் இணையவசதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் சில மணி நேரங்கள் திறந்து இருந்தன. இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்னும் இன்டர்நெட் முடக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது.

அதிகாரிகள் ஊரடங்கை ஏழு மணி நேரம் குறைத்ததால் சாலைகள் கார்கள் அதிக அளவில் இயங்கின.

Exit mobile version