Tamil News

18 ஆண்டுகளாக தலையில் தோட்டாவுடன் வாழ்ந்துவந்த வெளிநாட்டு இளைஞர்., வெற்றிகரமாக நீக்கிய பெங்களூரு மருத்துவர்கள்

18 ஆண்டுகளாக ஏமன் நாட்டவரின் தலையில் சிக்கியிருந்த தோட்டாவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.சுமார் 18 ஆண்டுகளாக தலையில் 3 சென்டிமீட்டர் நீளமுள்ள தோட்டாவுடன் வாழ்ந்து வந்த ஏமன் நாட்டவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.

பாதிக்கப்பட்ட இந்த இளைஞர் தனது உடன்பிறப்புகள், ஆறு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளுடன் யேமனில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.அப்போது அவருக்கு 10 வயது. கடைக்கு சென்று வீடு திரும்பும் போது இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதளுக்கு இடையில் சிக்கியுள்ளார். அப்போது ஒரு தோட்டா அவரது இடது காதுக்கு அருகே உள்ள (left temporal bone) எலும்பில் ஆழமாக ஊடுருவி, தலையிலிருந்து காதிலிருந்து இரத்தம் வெளியேறியது.உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார், ஆனால் அங்கு அவரது காயம் சுத்தம் செய்யப்பட்டது. ஆனால், தோட்டாவை தலையிலிருந்து அகற்றவில்லை.

இந்த காயத்தினால் அவர் காதுகேளாதவர் ஆனார். கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார். அவரது வாழ்க்கையே மாறியது.புல்லட் காதுக்குள் நுழைந்ததால், காது கால்வாய் சுருங்கியது. தோட்டாவின் ஒரு பகுதி காதுப் பகுதியில் பதிந்தது, தோட்டாவின் உள் முனை எலும்பில் பதிந்து, காயம் ஆறாமல் தடுத்தது. அங்கு சீழ் படிந்ததால், அடிக்கடி காதில் தொற்று ஏற்பட்டு, பின்னர் தலைவலி ஏற்பட்டது.

Bangalore Hospital news: Bengaluru doctors remove bullet stuck in man's head  for 18 years | Bengaluru News - Times of India

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அந்த நபருக்கு இப்போது 29 வயதாகிறது. கடந்த 18 ஆண்டுகளாக வலியுடனும் வேதனையுடனும் வாழ்ந்துவந்துள்ளார்.இந்த நிலையில், அவர் சில நண்பர்கள் மூலம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் உள்ள Aster மருத்துவமனையை அறிந்து மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியா சென்றார். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை மிகவும் கடினமாக இருக்கும் என்பதைக் கண்டனர்.

தோட்டா இரத்த நாளங்களுக்கு மிக அருகில் இருந்ததால் அதனை அகற்றப்பட்ட பிறகு நோயாளிக்கு இரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறினர்.தொட்டவுடன் தொடர்புடைய இரத்த நாளங்களைக் கண்டறிய MRIக்குப் பதிலாக Contrast CT Angiographyயை அறுவை சிகிச்சை குழு தேர்வு செய்தது. மேலும், Basic two-dimensional X-ray கதிர்களைப் பயன்படுத்தி தோட்டாவின் சரியான இடத்தைக் கண்டறிந்து, தோட்டாவை துல்லியமாக அகற்றப்பட்டது. இதனால், நோயாளிக்கு பாரிய இரத்தப்போக்கு ஏற்படவில்லை.

இந்த அறுவைசிகிச்சை நோயாளியின் வலியைப் போக்கியது மற்றும் ஓரளவு கேட்கும் திறனைப் அவர் பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்து ஏமன் நாட்டுக்கு திரும்பிய அந்த இளைஞர் தற்போது குணமடைந்து வருகிறார். அவர் தற்போது ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.

Exit mobile version