Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை காலவரையின்றி தடுத்து வைக்க தடை?

ஆஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களை காலவரையின்றி தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த உத்தரவின் மூலம், சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்த முடியவில்லையென்றால், தடுப்பு மையங்களில் காலவரையின்றி தடுத்து வைக்கலாம் என 2004ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படும்.

மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதி ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதிய முடிவின் மூலம், அவுஸ்திரேலியாவில் பல தடுப்பு மையங்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 90 சட்டவிரோத குடியேற்றவாசிகள் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு மையத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர் சராசரியாக 708 நாட்கள் தங்கியிருக்கும் காலம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 5 வருடங்களுக்கு மேலாக தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் 124 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version