Tamil News

அயலான் படத்தில் ஏலியன் யார் தெரியுமா?

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் பல பிரச்சனைகளுக்கு பின் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகி பாபு, ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார்.

படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் அதை VFXல் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர். அந்த பிரமாண்டத்தை சமீபத்தில் வெளிவந்த அயலான் டீசரில் பார்த்தோம்.

என்னதான் VFXல் ஏலியனை பிரமாண்டமாக காட்டியிருந்தாலும், VFXக்கு உதவும் வகையில் நடித்த நடிகர் யாரென்று இதுவரை பலருக்கும் தெரியவில்லை.

அவருடைய பெயர் வெங்கட் செங்குட்டுவன்.

இதோ அவருடைய புகைப்படம்..

Exit mobile version