Site icon Tamil News

அமெரிக்காவில் அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – 42 லட்சம் கோழிகளை கொல்ல உத்தரவு

அமெரிக்காவில் 42 லட்சம் கோழிகளைக் கொல்ல அமெரிக்க விவசாயத் துறை உத்தரவிட்டுள்ளது.

டெஸ் மோனெஸ்ஸில் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அயோவாவின் சியோக்ஸ் கவுண்டியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து 42 லட்சம் கோழிகளை கொல்லும் பணியில் பண்ணை ஊழியர் ஈடுபட்டுள்ளனர்.

மின்னசோட்டா மாகாணம் மின்னேபோலிஸ்ஸுக்கு வடக்கே உள்ள கோழிப் பண்ணையில் கடந்த வாரம் பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டதில் ஏற்கனவே 14 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டன.

கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து மட்டும் இதுவரை 9 கோடியே 20 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நோய்த் தொற்று கறவை மாடுகளையும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version