Site icon Tamil News

அமெரிக்காவில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிய பறவைக் காய்ச்சல்

அமெரிக்காவில் 4 பேருந்து பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொலோராடோவில் கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5ஆவது நபர் ஒருவருக்கு அது தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மனிதர்களுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்றும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையம் தெரிவித்தது.

கிருமி உருமாறி மக்களிடையே எளிதில் பரவக்கூடிய தன்மையைப் பெற்றால் பெருந்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அது கூறியது.

H5N1 பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் ஆராயப்படுகின்றன. நோய் தொற்றியவர்களுக்குத் தற்போது மிதமான அறிகுறிகளே உள்ளன. கண்கள் சிவந்திருப்பதாகவும், கண்களில் எரிச்சல் இருப்பதாகவும் நோய்வாய்ப்பட்டவர்கள் கூறினர். அவர்களுக்கு மிதமான சுவாசப் பிரச்சினைகளும் உள்ளது.

Exit mobile version