Tamil News

விஜய் 68இல் இருந்து தூக்கப்பட்ட ஜோதிகா… வாய்ப்பை பிடித்த சிம்ரன்…

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ஆரவாரமாக வெடிக்க போகிறது.

இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி கொடுத்து, வசூல் அளவில் சாதனை படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனை தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார். அதற்கான வேலைகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஜய்யை இளமையாக காட்ட நவீன டெக்னாலஜியை பயன்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வேலைகளும் மெதுமெதுவாக தொடங்கிய நிலையில், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாய் இருந்த ஜோதிகா தற்போது இதிலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்திரமுகி 2 படத்தையும் மிஸ் பண்ணிய ஜோதிகா, தற்போது தளபதி 68 படத்தையும் மிஸ் பண்ணி விட்டார்.

இதற்கிடையில் சைடு கேப்பில் புகுந்து இவருக்கு கிடைத்த வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டார் தற்போது ஆன்ட்டி நடிகை. அவர் வேறு யாரும் இல்லை ரீ என்ட்ரி மூலம் விக்ரம், மாதவன் மற்றும் ரஜினியுடன் நடித்த சிம்ரன் தான். இவர் தான் தற்போது தளபதி 68 படத்தில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்து வருகிறது.

ஏற்கனவே விஜய், சிம்ரன் காம்போ தூள் கலக்கும் வகையில் ரசிகர்களை குதூகல படுத்திருக்கிறது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து மறுபடியும் இவர்கள் இணையப் போகிறார்கள் என்றால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும்.

அத்துடன் இவர்கள் ஒன்றாக நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தளபதி 68 படத்துக்கு வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது.

 

Exit mobile version