Site icon Tamil News

பொலிவியாவில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அரண்மனைக்குள் நுழைந்து அங்கு ஆட்சியைப் பிடித்த கிளர்ச்சிக் குழுவின் இராணுவத் தளபதி ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜூனிகா பொலிவியன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் மூலம் அது நிகழ்ந்தது.

நாட்டின் தலைநகரில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் திடீரென ஆயுதம் ஏந்திய வாகனங்களும், ராணுவ வீரர்களும் புகுந்து அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்.

அங்கு பேசிய கிளர்ச்சி இராணுவத் தலைவர், ஜனநாயகத்தை மறுசீரமைக்க விரும்புவதாகக் கூறினார்.

அவர் கைது செய்யப்பட்டதையடுத்து, ராணுவ வீரர்கள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினர்.

பொலிவியாவின் முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜூனிகா, பொலிவியாவின் முன்னாள் தலைவர் ஈவோ மொரேல்ஸை பகிரங்கமாக விமர்சித்ததை அடுத்து கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

Exit mobile version