Site icon Tamil News

அமெரிக்காவில் வெங்காயத்தால் வந்த வினை : சால்மோனெல்லா விஷத்தால் 73 பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் சால்மோனெல்லா விஷம் காரணமாக ஏறக்குறைய 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

துண்டுகளாக வெட்டப்பட்ட வெங்காயத்தின் மூலமாக குறித்த விஷம் அமெரிக்காவின் 22 மாநிலங்களில் பரவியதாக கூறப்படுவதுடன், மதிப்பிடப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தொற்றுப்பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சால்மோனெல்லா விஷமானது வைத்தியர்களின் தேவையின்றியே குணமடைவதால் பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலானோர் இது சம்பந்தமான பரிசோதனையை மேற்கொள்ளவில்லை என தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பெரும்பாலம் பச்சையாக உண்ணக்கூடிய சாலட்கள் மூலம் இந்த விஷம் உடலுக்குள் செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கில்ஸ் ஆனியன்ஸ் என்ற நிறுவனம், துண்டுகளாக்கப்பட்ட மஞ்சள் வெங்காயம், சிவப்பு வெங்காயம் மற்றும் மைர்பாய்க்ஸ் எனப்படும் வெங்காயம், செலரி மற்றும் கேரட் ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கிய பல தயாரிப்புகளை தன்னார்வமாக திரும்ப பெற்றுள்ளது.

பொது பாதுகாப்பு நலன் கருதி எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரும்பப் பெறப்பட்டது என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version