Site icon Tamil News

டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் அஷ்வின்! பல சாதனைகள் முறியடிப்பு

வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஒருகட்டத்தில் 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் இருந்த இந்திய அணியை ஆல் ரவுண்டர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சரிவில் இருந்து மீட்டனர்.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியதுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில், அஸ்வினின் சுழல் ஜாலத்தால் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதமடித்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்திய அஸ்வின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னேவின் சாதனையும் சமன்செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையுடன் இரண்டாவது பிடித்துள்ளார்.

இந்தச் சாதனைப் பட்டியலில் இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அஸ்வின் படைத்த சாதனைகள்:

1. இந்தியாவுக்காக இரண்டாவது அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் (522 விக்கெட்டுகள்)

2. டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக 5 விக்கெட்டுகள் (37 முறை)

3. டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் (10 முறை)

4. உலகில் குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர்.

5. 8-வது வரிசையில் களமிறங்கி அதிவேகமாக அதிக சதங்கள் விளாசிய வீரர் (4 சதங்கள்)

6. 30 முறைக்கும் மேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் மற்றும் 20 முறைக்கு மேல் 50-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைகளுக்கும் சொந்தக்காரர் அஸ்வின்.

டெஸ்ட் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்கள்

முத்தையா முரளிதரன் -67

ரவிச்சந்திரன் அஸ்வின் -37

ஷேன் வார்னே -37

ஆர்ஜே ஹார்ட்லி – 36

அனில் கும்ப்ளே – 35

Exit mobile version