Site icon Tamil News

நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம் – பந்துல!

பொது போக்குவரத்து பஸ் சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20.07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அமைச்சர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்  பொது போக்குவரத்து பேருந்து சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் ஈ-டிக்கெட்டிங் முறைமைக்குள் கியூ. ஆர் மற்றும் காட் முறைமையையும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

டிக்கெட் வழங்காத நடத்துனர்கள் பலர் தற்பொழுது வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் நடத்துனர் இன்றி சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் பேருந்துகளின் வருமானம் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன்  இலங்கை போக்குவரத்து சபையில் பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் அதனை தடுக்கும் வகையிலேயே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மயப்படுத்தலோடு ஒப்பிடுகையில் நமது நாடு வெட்கப்படக் கூடிய நிலையில் காணப்படுகிறது எனவும்  ஒரே உபகரணம் 4 டிப்போக்கள் மூலம் ஒவ்வொரு விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version