Tamil News

அடிக்கடி டீ குடிப்பவரா நீங்கள்..? அதிர்ச்சியை கிளப்பியுள்ள ஆய்வு முடிவுகள்

அடிக்கடி டீ குடிப்பதால் தற்கொலை எண்ணம் ஏற்படும் என சீனாவின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவிதமான சோர்வாக இருந்தாலும் சரி டீ குடிப்பதையே சில வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அது ஒருவிதமான புத்துணர்ச்சியைக் கொடுப்பதாகக் கூறுவர்கள்.

சீனாவில் பெரும்பாலானோர் க்ரீன் டீ மட்டுமே குடித்து வந்த நிலையில், தற்போது பால் கலந்த டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் சிங்வா பல்கலைக்கழகம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடையே ஆய்வுகள் நடத்தியுள்ளது.

Your Favourite Milk Tea Causes Depression, Addiction; Study Reveals Shocking  Results | Health News, Times Now

இதில் அடிக்கடி டீ குடிக்கும் மாணவர்களிடம் மனச்சோர்வு மற்றும் பதற்றம் அதிகமாக உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டீ யில் உள்ள ’காஃபின்’ என்ற வேதிபொருள் மனசேர்வையும், தனிமை உணர்வையும் அதிகரிக்கிறது என சீனா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிக்கடி டீ குடிப்பது குற்ற உணர்ச்சியை அதிகரிப்பத்தோடு, தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதாக உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

“அடிக்கடி டீ குடித்துவிட்டு திடீரென நிறுத்தினால் நிச்சயமாக மனசோர்வு அதிகரிக்கக் கூடும் என்பது உண்மைத்தான். டீ குடிப்பதால் அந்த நேரத்திற்கான ஒரு விடுதலை கிடைப்பதாக நம்மால் உணர முடியும். ஆனால் அதுவே நிரந்தரம் என்று இருந்துவிடக் கூடாது” என்கிறார்கள் மருத்துவர்கள்.

Exit mobile version