Site icon Tamil News

அடிக்கடி Shampoo பயன்படுத்துபவரா நீங்கள்…? உங்களுக்கான பதிவு

நம்மில் பெரும்பாலானோர் நமது தலைமுடியை சுத்தமாக ஆரோக்கியமாக வைத்திருக்க Shampoo உபயோகிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போடுவது நேர்த்தியான மற்றும் மிருதுவான முடியை தரும் என பலர் நமபுகின்றனர்.

தற்போது இந்த பதிவில், ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்தால் நீங்கள் அனுபவிக்கும் சில பக்க விளைவுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகப்படியான எண்ணெய் எப்போதும் ஒரு நல்ல அறிகுறி அல்ல, இருப்பினும், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு சில இயற்கை எண்ணெய் அவசியம்.

அதிகப்படியான Shampoo உபயோக்கித்தல் முடியின் இயற்கையான ஊட்டச்சத்துக்களைக் குறைக்கும், இதனால் முடி கடினமானதாகவும், உடையக்கூடியதாகவும் மாறுகிறது.

பளபளக்கும் முடியை மங்கச் செய்கிறது

உங்கள் தலைமுடிக்கு பொலிவை மீட்டெடுப்பதற்கான மிகச் சிறந்த முறைகளில் ஒன்று, அதை அடிக்கடி Shampoo செய்வதே, வறட்சியைத் தடுக்கிறது மற்றும் பளபளப்பைப் பராமரிக்கிறது என்பதை பல முடி பராமரிப்பு நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, ஏற்கனவே மங்கிப்போன உங்கள் தலைமுடி இன்னும் மந்தமாகாமல் இருக்க விரும்பினால், தினமும் ஷாம்பு போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நிறம் வேகமாக மங்கிவிடும்

நம்மில் பெரும்பாலானோருக்கு முடி கருமையான நிறத்தில் இருப்பது தான் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஆனால், நாம் தினமும் Shampoo செய்வதால், அந்த Shampooகளில் இருக்கும் கெமிக்கல்கள் நமது கருமையான முடியை மக்களாக அல்லாது பித்தளை நிறத்தில் மாற்ற கூடும். எனவே முடிக்கு அடிக்கடி ஷாம்பூ செய்வதை தவிர்ப்பதும் நல்லது.

முடி வெடிப்பு ஏற்படுத்துகிறது

நம்மில் மெரும்பாலானோருக்கு நுனி முடி வெடிப்பு ஏற்படுவதுண்டு. இதற்க்கு காரணமும் Shampoo உபயோகிப்பது ஆகும். இந்த பிரச்சனையை அதவிர்ப்பாது நாம் கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

பொடுகு

வெதுவெதுப்பான நீர் மற்றும் உங்கள் உச்சந்தலையை அதிகமாக கழுவுதல் ஆகியவை உச்சந்தலையை வறண்டு போகச் செய்யலாம், இதன் விளைவாக பொடுகு ஏற்படலாம். இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு அவ்வப்போது தலையை Shampooவால் கழுவுவதைத் தவிர்ப்பது சிறந்த அணுகுமுறை என்று பல நிபுணர்கள் நம்புகிறார்கள்.

Exit mobile version