Site icon Tamil News

பகலில் சிறிது நேரம் தூங்குபவரா நீங்கள்? – ஆய்வில் வெளியான மகிழ்ச்சியான தகவல்

பகல் நேரங்களில் சிறிது நேரம் தூங்குவது பல விடயங்களுக்கு உதவலாம் என்று புதிய ஆய்வில் தெ ரிய வந்துள்ளது.

வயதாக ஆக மூளையின் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் பகல் நேர தூக்கத்திற்கு உதவுவதாக குறிப்பிடப்படுகின்றது.

தொடர்ந்து மதிய வேளைகளில் 5 முதல் 15 நிமிடங்கள் தூங்குவதற்கும் மறதி நோய் உட்படச் சில நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதற்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

லண்டன் பல்கலைகழகம் உட்பட இரு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர்.

மூளையின் ஆரோக்கியத்திற்குத் தூக்கம் முக்கியம் என்பதை ஆய்வு முடிவுகள் உணர்த்துவதாக தெரியவந்துள்ளது.

Sleep Health சஞ்சிகையில் வெளியாகிய அந்த ஆய்வில் 40 வயது முதல் 69 வயது வரையிலான சுமார் 35,000 பேரின் மூளை ஸ்கேன்களும் மரபணு மாதிரிகளும் ஆராயப்பட்டன.

ஆனால் அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் ஆரோக்கியமில்லை என கூறப்படுகின்றது.

அது உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

Exit mobile version