Tamil News

பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய அரண்மனை 4 – மொத்த வசூல் ரிப்போர்ட் வெளியானது

இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகுதான் தமிழ் சினிமா சற்று தலைதூக்கியுள்ளது.

அரண்மனை 4 கடந்த 3ம் திகதி வெளியானது. அனைவர் மத்தியிலும் ஆர்வத்தை உருவாக்கியிருந்த இப்படம் முதல் காட்சியிலேயே ஸ்கோர் செய்திருந்தது. அதை தொடர்ந்து படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவாக இருந்தது.

மேலும் விடுமுறை நாள் என்பதாலும் குடும்பத்தோடு பார்க்கும் படியாக படம் இருந்ததாலும் கூட்டம் தியேட்டரில் அலைமோதியது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

அந்த வகையில் தற்போது பட குழு அரண்மனை 4 பாக்ஸ் ஆபீஸ் வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி தற்போது வரை இப்படம் 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமின்றி இந்த வருடத்தின் முதல் பிளாக் பாஸ்டர் ஹிட் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கும் சுந்தர் சி அடுத்த பாகத்தை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Exit mobile version