Site icon Tamil News

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு பிரபலம்

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸ், போட்டியிடுவதற்கு தயாராகிவருகின்றதாக கூறப்படுகின்றது.

63 வயதான மைக் பென்ஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். 2017 முதல் 2021 வரை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

இந்நிலையில் தற்போது 63 வயதான அவர், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான பிரச்சாரங்களை எதிர்வரும் 7 ஆம் த திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதேவேளை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தள்ளார்.

அத்துடன் புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ், ஐநாவுக்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹாலே, முதலானோரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு போட்டியிடுகின்றனர்.

மேலும் நியூ ஜேர்ஸி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியும் அடுத்தவாரம் இப்போட்டியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போதே அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Exit mobile version