Site icon Tamil News

பிரக்யான் ரோவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் சந்திரனை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ‘பிரக்யான்’ ரோவர் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ரோவருக்கான திட்டமிடப்பட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும், அது உறக்கநிலையில் உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிரக்யான் தரையிறங்கிய நிலவின் தென் துருவப் பகுதியில் இரவு நேரம் தொடங்கியதால் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.  பிரக்யான் ரோவரின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு சூரிய சக்தி அவசியம்.

சந்திரனின் அடுத்த சூரிய உதயம் செப்டம்பர் 22 அன்று ஆரம்பமாகும். அதன் பிறகு பிரக்யானைப் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இருப்பினும், பிரக்யான் மீண்டும் செயல்படவில்லை என்றால், அது இந்தியாவின் நிலவு தரையிறக்கத்தின் பிரதிநிதியாக இந்தியர்களின் இதயங்களில் எப்போதும் நிலைத்திருக்கும் என்றும் இந்திய விண்வெளி அமைப்பு கூறுகிறது.

Exit mobile version