Site icon Tamil News

கனடாவில் விலங்குகள் மீதான பரிசோதனைகளுக்கு தடை

கனடாவில் விலங்குகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி செய்யும் பரிசோதனைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.எலி, நாய், மற்றும் முயல் போன்ற விலங்குகளிடம் மேற்கொள்ளப்படும் இரசாயன பரிசோதனைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரசாயனப் பொருட்களினால் மனிதருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து கண்டறிந்து கொள்வதற்காக இவ்வாறு விலங்குகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.இந்த பரிசோதனைகளின் மூலம் விலங்குகள் மீது மிதமிஞ்சிய அளவில் நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக மிருக நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இனி வரும் காலங்களில் கனடாவில் விலங்குகளைக் கொண்டு இவ்வாறான பரிசோதனகைள் நடத்தப்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா, ஐரோப்பா போன்றவற்றில் ஏற்கனவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version