Site icon Tamil News

உளவுத்துறை எச்சரிக்கை சட்ட ஒழுங்கு ஏற்படும்

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் “டீசர்” சமீபத்தில் வெளியானது.

அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம் பெண்கள் மாயமாவது போன்றும் அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன,

இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இதை அடுத்து இந்த படத்தில் பத்து காட்சிகள் நீக்கப்பட்டு புதிய டீசர் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் இந்த படம் திரைக்கு வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதை அடுத்து இந்த திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடும் எதிர்ப்புக்கு இடையே கேரளாவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ளது.

படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இஸ்லாமியர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version