Site icon Tamil News

அலாஸ்கன் பெண்களைக் கொன்றதற்காக அமெரிக்கர் ஒருவருக்கு 226 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமெரிக்காவில் பிரையன் ஸ்டீவன் ஸ்மித் என்பவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், 2019ம் ஆண்டில் கேத்லீன் ஹென்றி என்ற பெண காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்திருத்தனர். ஆனால் பிரைன் ஸ்டீவன் ஸ்மித் என்பவர் தான் 2019ம் ஆண்டில் கேத்லீனை கொன்று அதை வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.

கேத்லீனை கொன்ற வீடியோ வை்திருந்த மொபைபை காரில் ஸ்டீவன் வைத்திருந்த போது மொபைலை திருடிய பெண் ஒருவர் அதிலிருந்த விடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஸ்டீவன் ஸ்மித்தை கைது செய்தனர்.

அதுமட்டுமன்றி ஸ்டீவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவருடைய மனைவியான வெரோனிக்காவையும் கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

ஸ்டீவனின் மனைவியின் கொலை குறித்து அவர் கூறுகையில், வெரோனிக்கா வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது துர்நாற்றமாக இருந்ததால் அவரை குளிக்க சவன்னேன் ஆனால் அவர் மறுத்து விட்டார் ஆதனால் கோபமுற்று அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றேன் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, இரண்டு பேரை கொலை செய்ததற்காக, தலா 99 ஆண்டுகள் வீதம் 198 ஆண்டுகள் மற்றும் கேத்லீனை பாலியல் வன்கொடுமை செய்த்தற்காக 28 ஆண்டுகள் என மொத்தம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version