Site icon Tamil News

புதிய கிரகத்தைக் கண்டுபிடித்து அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் வெற்றி

ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் உதவியுடன், நீர்த் துகள்கள் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்ட புதிய கிரகத்தைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த புதிய கிரகத்திற்கு ஜிஜே 9827 டி என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

குறித்த கிரகம் 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நீர் துகள்கள் நிறைந்த வளிமண்டலம் இருப்பதால், இந்த கிரகத்தில் உயிர்கள் இருக்க வாய்ப்பு உள்ளது அல்லது உயிர்கள் தோன்றுவதற்கு தேவையான காரணிகள் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Exit mobile version