Site icon Tamil News

YouTubeஇல் Ad Blocker பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

யூடியூபில் ஆட் பிளாக்கர் பயன்படுத்தி விளம்பரங்களை தடை செய்யும் பயனர்களை அதிரடியாக நீக்கி வருகிறது யூடியூப்.

கூகுளுக்கு அடுத்தபடியாக யூடியூப்தான் மக்கள் அதிகமாக தேடி பார்க்கும் விஷயங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை அனைவருமே இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை நாம் இலவசமாக பயன்படுத்தினாலும் அதில் வரும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். ஆனால் அதன் மூலமாகவே youtube நிறுவனத்திற்கு அதிக வருவாய் வருகிறது.

அதேசமயம் யூடியூபில் விளம்பரங்கள் வராமல் இருப்பதற்கு அதற்கு குறிப்பிட்ட தொகையை சந்தாவாக செலுத்தி பிரீமியமில் இணைந்து கொள்ளலாம். எனவே youtube பிரீமியமில் மக்களை இணைப்பதற்கான பல முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் இந்த வெர்ஷனில் பயனர்களுக்கு பல்வேறு விதமான அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் Enhanced Bitrate 1080 வீடியோ ரெசல்யூஷன் என்ற அம்சம் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் இலவச வெர்ஷனில் பார்க்கும் காணொளி ரெசல்யூஷனைவிட கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட ரெசல்யூஷனில் வீடியோக்களை பார்க்கலாம்.

இந்த அம்சம் தொடக்கத்தில் iOS பயனர்களுக்கு வழங்கப்பட்டாலும், இப்போது எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. யூடியூப் ப்ரீமியம் கட்டணத்தை செலுத்தி யூடியூபில் மிகச் சிறந்த அனுபவத்தை பயனர்கள் மேம்படுத்த முடியும் என நிறுவனம் விளக்குகிறது. இருப்பினும் சாதாரண யூட்யூபுக்கும், பிரீமியம் யூட்யூபுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை என்பதால், பயனர்கள் இதைப் பயன்படுத்துவதில்லை.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மில்லியன் கணக்கான பயனர்கள் விளம்பரங்களுடன் இயங்கும் யூடியூப் வெர்ஷனை பயன்படுத்துகிறார்கள். இதில் சிலர் விளம்பரங்களை தடுப்பதற்காக ஆட் பிளாக்கர்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதை அறிந்த யூட்யூப் நிறுவனம் அத்தகைய நபர்களைக் கண்டறிந்து பிளாக் செய்து வருகிறது.

இந்த செயல்பாடு கிரியேட்டர்களுக்கு பணம் செலுத்த உதவும் என்பதால், ஆட் பிளாக்கர் பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பி வருகிறது யூடியூப். மேலும் அவர்கள் தங்களின் ஆட் பிளாக்கரை நீக்குவதற்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அதன் பிறகும் அவர்கள் நீக்கவில்லை என்றால் அக்கவுண்ட் முழுவதுமாக லாக் செய்யப்படும்.

 

Exit mobile version